என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காவிரி தாய்
நீங்கள் தேடியது "காவிரி தாய்"
கர்நாடகாவில் உள்ள மண்டியா மாவட்டத்தில் காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க அம்மாநில அரசு இன்று தீர்மானித்துள்ளது. #Karnatakagovernment #Cauvery
பெங்களூரு:
கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சாரா ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று நடைபெற்றது.
மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும். அந்த அருங்காட்சியகத்தின் உச்சியில் காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு இந்த சிலையும், அருகாமையில் 360 அடியில் கண்ணாடியால் ஆன இரு கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பங்களிப்புடன் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்துக்கு தேவையான நிலம் மட்டும் அரசு ஒதுக்கீடு செய்யும் என மந்திரி சிவக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். #Karnatakagovernment #Cauvery
×

X